திருச்சியில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AILU) சார்பாக நீதிமன்றம் வாயிலின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும், கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வழக்கறிஞர்களுக்கு 3 லட்சம் வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும் என்றும், குற்றவியல் சட்ட திருத்த குழுவை உடனே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமையில் பல வழக்கறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர்.,
Comments