திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 20 ஏர்போர்ட் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்டர் மீடியம் ஓரமாக உள்ள மண்ணை சுத்தம் செய்யும் பணியில் தாழம்பூ சுய உதவி குழுவில் பணி புரியும் தினக்கூலி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செல்வி, குணசுந்தரி, மாரியப்பன் ஆகிய மூன்று பேர் மீது அந்த வழியாக வந்த கார் மாநகராட்சியினுடைய பேட்டரி வாகனம் மற்றும் மூன்று பேரும் மீது விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மூவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபடுத்துவதாகவும், விபத்தில் பாதிக்கப்பட்ட மூவருக்கும் நிவாரணத் தொகையை மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என தினக்கூலி தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments