நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பெரும்பாலி கிராமத்தை சேர்ந்த ராஜா அவரது குடும்பத்துடன் ஆம்னி வேனில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் வாத்தலையில் வேனை நிறுத்தினர்.டீ குடிக்க சிலர் சென்றனர்.அப்போது திருச்சி நோக்கி வந்து லாரி கட்டுப்பாட்டை இழந்து ஆம்னி வேனில் மீது மோதி உருண்டது. வேனில் அமர்ந்திருந்த ஒரு குழந்தை மற்றும் ராஜாத்தி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
இந்த விபத்தில் ராசாத்தி (வயது43) பலியான நிலையில் அவரது கணவர் ராஜாவும், குழந்தை ரக்ஷனா (வயது2.5) சம்பவ இடத்தில் பலியாகினார். பிரியதர்ஷினி என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.அவரது தந்தை ரமேஷ் டீ குடிக்க சென்று விட்டதால் காயம் இல்லாமல் உயிர் தப்பினார்.விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் அசோக் தப்பி ஓடி விட்டார். வாத்தலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO
Comments