திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தும், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் அந்த தனியார் ஓட்டல் உரிமையாளர்,AVS தனிப்படை பிரிவுஆய்வாளர் கருணாகரனுக்கு தகவல் அளித்தார்.
அந்த தகவலின்அடிப்படையில் கருணாகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரபின் கிறிஸ்டல்ராஜ் ( வயது 40 )என்பவரும், திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சுப்ரமணியபுரத்தை சேர்ந்த முத்து என்பவரது மனைவி ரமீஜா பானு (வயது 50) என்பவரும் சேர்ந்து 17 வயது சிறுமி ஒருவரை ஏமாற்றி, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியும், அச்சிறுமியை அச்சுறுத்தி மேற்படி பிரபின் கிறிஸ்டல்ராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியை விசாரித்த மாவட்ட குழந்தை நல அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ, விபச்சார தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், பிரபின் கிறிஸ்டல்ராஜ் கடந்த 15 வருடங்களாக தொலைகாட்சி நிறுவனம் ஒன்றில் நிருபராக வேலை பார்த்து, தற்போது “சிலந்தி வலை” என்ற மாதாந்திர பத்திரிக்கையில் நிருபராக பணிபுரிவதும்,
ரமீஜா பானுவுடன் சேர்ந்துக்கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை சீரழித்ததும், பாதிக்கப்பட்ட சிறுமியை பல நபர்களுக்கு ஏமாற்றியும், கட்டாயப்படுத்தியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதும், அச்சிறுமியை பிரபின் கிறிஸ்டல்ராஜ் கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

இக்குற்ற செயல்களுக்கு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரான நித்யாவும் உடந்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்துபிரபின் கிருஸ்டல் ராஜ்,ரமீஜா பானு மற்றும் நித்யா மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் தொடர் விசாரணையில், மேற்படி சிறுமியை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மனோகர் என்பவரது மகன் பாலமுருகன் (வயது 29) என்பவருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் பாலமுருகனின் பெற்றோர் குழந்தை திருமணம் செய்து வைத்ததும், அச்சிறுமியுடன் பாலமுருகன் கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதும், பின்னர் குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமி தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில் அவரது பெற்றோர்கள் வாங்கிய கடனுக்காக ரமீஜா பானுவிடம் வேலைக்கு அனுப்பியதாகவும், அச்சிறுமியை ரமீஜா பானுவும், பிரபின் கிறிஸ்டல் ராஜும் சேர்ந்து கொண்டு ஏமாற்றி, கட்டாயய்பபடுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவரம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே குற்றச்சாட்டு குள்ளான மூவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறி
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 13 April, 2023
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          
Comments