மருந்து கடை வைப்பதற்கு உரிமம் தர கடந்த 2008 ஆம் ஆண்டு 7000 ரூபாய் லஞ்சம் கேட்ட மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் பார்த்திபன், முதுநிலை கட்டுப்பாட்டு ஆய்வாளர் சிவ புண்ணியம் புரோக்கர் சேகர் உளிட்ட மூன்று பேருக்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மூன்று வருடம் சிறை தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார் .
திருச்சி உறையூர் நவாப் தோட்டத்தை சேர்ந்த அன்பரசு கடந்த 2008 ஆம் ஆண்டு மருந்து கடை வைப்பதற்கு உரிமம் தர 7000 ரூபாய் லஞ்சம் கேட்ட பொழுது உதவிய இயக்குனர் பார்த்திபனுக்கு 5000 ரூபாயும் சிவப்பு புண்ணியத்திற்கு 2000 ரூபாயும் கொடுக்க சொல்லி அத்தொகையை சேகர் என்பவர் வாங்கி கொடுத்தார்.இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அப்பொழுது இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது 3 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் திருச்சியில் லஞ்ச ஒழிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments