திருச்சி பொன்மலை கோட்டம் 46வது வார்டில் பெரிய மிளகு பாறை வேடுவர் தெருவில் பொதுநிதி 2020-21ன் கீழ் ரூபாய் 2.90 லட்சம் மதிப்பில் பெரிய மிளகுபாறை, வேடுவர் தெருவில் ஆழ்துளை கிணற்றுடன் மின் மோட்டார் பொருத்திய தரைமட்ட தண்ணீர் தொட்டியை பொதுமக்களை பயன்பாட்டிற்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
இதனையெடுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 75 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார். இதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு மருத்துவமனை டீன் வனிதாவிடம் வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு… பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் இருந்து 150 ஆக்ஸிஜன் கருவிகளைத் பெற்று வந்து 75 கருவிகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், மீதம் 75 கருவிகள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.
திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மொத்த படுக்கை வசதி 1099. இதில் 175 படுக்கைகள் காலியாக உள்ளது. ஆக்ஸிஜன் படுக்கை 743ல் 30 படுக்கைகள் காலியாக உள்ளன. ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகள் 356 உள்ளன. 145 காலியாக இருக்கிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 பேர் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதே போன்று 200 பேர் சிகிச்சை முடிந்து செல்கிறார்கள். திருச்சியில் கொரோனா பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதால் தான் மருத்துவமனையில் படுக்கைகள் காலியாக உள்ளன.
மருத்துவமனைக்கு தேவைப்படும் மருத்துவர்கள், செவியர்களை முதலமைச்சர் உத்தரவு பெற்று பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பகுதிகளுக்கு 700 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு முடிந்த பிறகு காந்தி மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் இதில் எந்த மாற்றமும் இல்லை. தற்காலிக மார்க்கெட்டில் பொதுமக்கள் முககவசம், தனி மனித இடைவெளியை பின்பற்றுவதில்லை. அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும் மக்கள் அதை கேட்பதாக இல்லை. ஜீன் 12ல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் 66 கோடி ரூபாய் செலவில் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் திருச்சி மாவட்டத்திற்கு 6 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று குறைகளை கேட்ட ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். Go back Stalin என்று போட்டதை விட We stand with Stalin என்ற பதிவு தான் அதிகளவில் பதிவிடப்பட்டுள்ளது. எதிர் கட்சி என்ன மாலையா போடுவார்கள் அதிமுககார்கள் எங்களை பாராட்டுவார்கள் என நினைக்க முடியுமா நேரம் கிடைக்கும் போது எல்லாம் எங்களை திட்ட தான் செய்வார்கள். Go back Stalin என்று பதிவை விட We stand with Stalin என்ற பதிவு தான் முதலிடத்தில் உள்ளது. இதிலிருந்து மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது என்று தெரிவித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments