திருச்சி மாவட்டம்திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட நிலா முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). இவர் சிவில் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இவருக்கு சத்திய பிரியா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் வரும் 29ஆம் தேதி குழந்தைகள் இருவருக்கும் காதணி விழா நடத்துவதற்கு ராஜ்குமார் முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் காதணி விழா அழைப்பிதழை உறவினருக்கு கொடுப்பதற்காக தஞ்சை மாவட்டத்திற்கு குடும்பத்துடன் நேற்று சென்றுள்ளனர். இந்த நிலையில் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வருவதற்கு இரவனதால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிலேயே தங்கி உள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை ராஜ்குமார் மட்டும் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் முன்பக்க கதவுகளில் இருந்த இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டிற்குள் உள்ளே இருந்த மூன்று பீரோக்கள் திறந்து அலங்கோலமாக கடந்துள்ளது. அங்கு உள்ள டேபிள் டிராயர் லாக்கர் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இச்சம்பவம் குறித்து ராஜ்குமார் துவாக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு துவாக்குடி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மோப்பநாய் காவேரி வரவழைக்கப்பட்டு சோதனை செய்து வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி நின்றது.
கைரேகை பிரிவு போலீசார் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்தனர். வீட்டில் பீரோவில் வைத்திருந்த ராஜ்குமாரின் 27 பவுன் நகை மற்றும் காதணி விழாவிற்காக ராஜ்குமார் மாமியார் குழந்தைகளுக்கு செய்வதற்காக கொடுத்திருந்த மூன்றரை பவுன் நகை என மொத்தம் 30.1/2 பவுன் நகை ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments