108 திவ்ய பிரதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி திருவரங்கம் அரங்கநாதர் கோவில். இங்கு திருச்சி மட்டுமன்றி வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் திருவரங்கம் கோவிலில் தெற்கு கோபுரம் அடுத்துள்ள ரங்கவிலாச மண்டபம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 38 கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த கடைகளை அகற்றும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இன்று இரண்டு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள கடைகைளை அகற்றும் பணி படிப்படியாக நடந்து வருகிறது. கடைகளை நீதிமன்ற உத்தரவை ஏற்று அகற்றாவிட்டால் சீல் வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments