திருச்சி மாவட்ட கார்ப்பரேஷன், சிமென்ட் உற்பத்தியாளர்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி கடந்த 45 நாட்களாக டால்மியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு குப்பையில் இருந்து பெறப்பட்ட 350 மெட்ரிக் டன் பிளாஸ்டிக்குகளை தொழிற்சாலையின் எரிபொருளாக பயன்படுத்த அனுப்பபட்டுள்ளது.
திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு வள மீட்பு மையங்களில் (Resource Recovery Centres RRC) இருந்து தினமும் ஐந்து முதல் எட்டு டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது, இவை பெரும்பாலும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகள், பல அடுக்குகள் கொண்ட பிளாஸ்டிக்குகள் ஆகியவை ஆப்பிளும், குறிப்பாக சிப்ஸ் பாக்கெட்டுகள், கேரிபேக்குகள் போன்றவை தான்.
இவை அதிகளவில் சேகரிக்கப்பட்டு சேகரிப்பு மையங்களில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி, லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக மாற்றுகின்றனர். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை அகற்ற மாநகராட்சி மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதி, இதனால் அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையாக சேருவது குறைந்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments