திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதற்கிடையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சேர்ந்த பிரபாகரன் (34) என்பவர் கழிவறையில் இருந்து வந்துள்ளார். அப்போது அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், தனது உடலில் பேஸ்ட் வடிவத்தில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததும், அந்த தங்கத்தை கழிவறையில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதனையடுத்து விமான நிலைய கழிவறையில் இருந்த 724.5 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 35 லட்சத்து 79 ஆயிரம் ஆகும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments