Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

365 கிலோ தங்க நகைகளை இரண்டாவது நாளாக அளவிடும் பணி

தமிழக சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை 2021-2022 மானிய கோரிக்கையின் போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்களில், கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்கலாக, ஏனைய பொன் இனங்களை மும்பையில் உள்ள அரசுக்குச் சொந்தமான தங்க உருக்கு ஆலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கியில் முதலீடு செய்யப்படும் என அறிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பின் படி உலக புகழ்பெற்ற அம்மன் ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் முதன்மை ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழ்நாடும் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மாரியம்மன் வழிபட்டு செய்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய அம்மனுக்கு தங்களால் இயன்ற பொன் பொருட்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துவார்கள். அப்படி செலுத்தப்படும் காணிக்கைகளை மாதம்தோறும் இருமுறை எண்ணப்பட்டு பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

இந்நிலையில் கோயிலில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அதிகாரிகள் அதனை சரிபார்த்து சொக்க தங்கமாக மாத்தி அனைத்தும் மொத்தமாக மும்பையில் உள்ள ஸ்டேட் பேங்க் வங்கியில் டெபாசிட் செய்யபடுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 20ம் ஆண்டுக்கு பிறகு தற்போது 2024 ம் ஆண்டு செப் 09 தேதி நேற்று காலை 10:30 மணியளவில் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி துறைசாமி ராஜு தலைமையில், உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரவிசந்திரபாபு மற்றும் மாலா ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், காணிக்கையாகவும் வரப்பெற்ற மொத்தம் 365 கிலோ தங்க நகைகளை சரிபார்ப்பு பணி நடைபெற்றது .

இப்பணியில் இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையர் பிரகாஷ், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், அறங்காவலர்கள் மற்றும் அறங்காவலர் உறுப்பினர்கள் பிச்சைமணி, சுகந்தி ராஜசேகர் சேதுலெட்சுமணன், இந்து சமய அறநிலையத்துறை மூன்று மண்டலம் துணை ஆணையர் மற்றும் சரிபார்ப்பு அலுவலர்கள் சரவணன்,சிவலிங்கம்,ராமு, ஆகியோர் முன்னிலை துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் பணிகள் தொடங்கியது.

அதனைத்தொடர்ந்து திருச்சி, நாகப்பட்டினம் மற்றும் வேலூர் மண்டல நகை மதிப்பீட்டு வல்லுநர்கள் தங்க நகைகளை எடையிட்டு சுமார் 25 பொற்கொல்லர்கள் குழுவினரிடம் ஒப்படைத்தனர். இதில் பொற்கொல்லர்கள் தங்கதில் உள்ள அரக்கு, அழுக்கு, கற்களை அகற்றி பொன் இனங்களாக மாற்றி இவை அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி மூலம் மும்பையில் உள்ள மத்திய அரசு உருக்காலைக்கு கொண்டு சென்று உருக்கப்பட்டு, சுத்த 24 கேரட் தங்கமாக பாரத ஸ்டேட் வங்கியிடம் வங்கியிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி சுத்த தங்கத்தற்கான மதிப்பின் அடிப்படையில் தங்க பத்திரம் பெறப்படும்.

இதிலிருந்து கிடைக்கும் வட்டி, திருக்கோயில் வருவாயில் சேர்க்கப்படும் என உச்சநீதிமன்ற ஒய்வு நீதி அரசர் துரைசாமி ராஜூ தெரிவித்தார். மேலும் இந்த பணியானது உற்சவர் அம்மன் சன்னிதானம் முன்பு 12 கேமரகள் அமைத்து கண்காணிப்பில் 10 நாட்கள் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவித்தார். இரண்டாவது நாளாக இன்று பணிகள் தொடங்கி பிரித்தெடுக்கும் முறையில் 50 கிலோ நகைகள் பிரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக முன்னாள் நீதிபதி தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *