அபுதாபியிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு பயணிகளை மத்திய வான் நுண்ணிறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு ஆண் பயணியிடம் சோதனை நடத்தினர்.
அவரது மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பேஸ்ட் போன்ற பொருளில் தங்கம் இருப்பது தெரிய வந்தது. பின்னர் அந்த பயணியிடமிருந்து 37 லட்சத்து 39 ஆயிரத்து 680 ரூபாய் மதிப்புள்ள 580 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தங்கத்தை கடத்தி வந்த அந்த ஆண் பயணியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments