திருச்சி மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டு வரும் திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் 15.07.2021-ந் தேதி கோட்டை குற்றப்பிரிவு தனிப்படையினர் EB ரோட்டின் அருகே வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்தவர் போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றபோது, அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளார்.
விசாரனையில் தனது பெயர் கிரிநாதன் (44/21), த.பெ.ராஜேந்திரன், எண்: 3/56 காந்திநகர், புங்கனூர், ஸ்ரீரங்கம், திருச்சி என்றும்,
தொடர் விசாரணையில் 39 இருசக்கர திருடியதாகவும் ஒப்புக்கொண்டார்.
திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட கோட்டை, உறையூர், தில்லைநகர் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய 13 வாகனங்களும், பெரம்பலூர், விராலிமலை, விழுப்புரம் பகுதிகளில் திருடப்பட்ட தலா ஒரு வாகனமும், மொத்தம் 16 வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மீதமுள்ள 23 வாகனங்களின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு சட்டப்படி ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட
கிரிநாதனைகோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கைது செய்து, அவரிடமிருந்து 39 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ததை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டியுள்ளார்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments