திருச்சி மாவட்டம் மணப்பாறை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு இருந்த போது மணப்பாறைப்பட்டி ரோட்டில் உதயம் தியேட்டர் அருகில் மணப்பாறை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (24), காட்டுப்பட்டியை சேர்ந்த கேசவ பாண்டியன் (20),
அண்ணாவி நகரை சேர்ந்த வினோத்குமார் (20), காந்தி நகரை சேர்ந்த சிவனேசன் (57) ஆகிய 4 பேரும் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இவர்களை கைது செய்த போலீசார் இவர்களிடமிருந்து 1 கிலோ 400 எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments