திருச்சி மாவட்டம் மணிகண்டம் நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அழகிரி. இவரது மனைவி சின்ன அக்கா என்பவர் வயல்வெளியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள் தேடி வந்தனர். இதற்கிடையில் அவர்கள் சென்ற போது அங்குள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவர்களுடையது முகத்தை அடையாளம் கண்ட காவல் துறையினர் 4 பேரையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
முதலில் கவுத்த நாயக்கன்பட்டி சேர்ந்த பாஸ்கர் என்பவரையும், நாகமங்கலம் பகுதியை சேர்ந்த வீரமணி, பாண்டியன், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாலாஜி உள்ளிட்ட 4 பேரை மணிகண்டம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய 2 இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments