திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமம் வேத பாடசாலையில் பயிலும் நான்கு சிறுவர்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர்களின் கோபாலகிருஷ்ணன் உயிருடன் மீட்கப்பட்டார். மற்றொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீரில் மூழ்கிய மேலும் இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.
நீரில் மூழ்கி இறந்து போன விஷ்ணு பிரசாத்துக்கு 14 வயது, ஹரி பிரசாத்துக்கு 15 வயது இவர்கள் இருவரும் மன்னார்குடியை சேர்ந்தவர்கள். அபிராம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். விஷ்ணு பிரசாத் என்பவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஹரி பிரசாத் மற்றும் அபிராம் இருவரது உடல்களை தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இவர்கள் யாத்ரிகர் நிவாஸ் அருகில் உள்ள ஸ்ரீமான் பட்டர் பாடசாலையில் பயின்று வந்தவர்கள். கொள்ளிடத்தில் மழைநீர் அதிகமாக சென்றதால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments