துபாயில் இருந்து நேற்று மாலை திருச்சி விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது கடலூரைச் சேர்ந்த மாரிமுத்து வினோத் கள்ளக்குறிச்சியை சேர்ந்த இப்ராஹிம் சாகுல் ஆகிய இருவர் வீட்டு உபயோக பொருளில் மறைத்து எடுத்து வந்த 4 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 1.92 கோடி ஆகும். தங்கம் கடத்தி வந்த இருவரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments