திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓயாமாரி பிரதான சாலையில் தேர்தல் பறக்கும் படை தலைமை அலுவலர் பொ. முத்துக்கருப்பன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. இச்சோதனையில் மணப்பாறையை சேர்ந்த பிரபு என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட ரூ.3 லட்சத்து 63 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி கிழக்கு வட்டாட்சியர் ம. லோகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதே போன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருச்சி மாத்தூர் சோதனை சாவடி அருகே வாகனகளை சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட71 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்து திருவெறும்பூர் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments