திருச்சி பாலக்கரை கேம்ஸ்டவுன் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்த போது, 4 பேர் போதை மாத்திரை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக முதலியார் சத்திரத்தை சேர்ந்த சையது முஸ்தபா (19), ஆல்வின் (21), சங்கிலியாண்ட புரத்தை சேர்ந்த மேகநாதன் (22) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் மற்றும் ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments