திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் அருகே நேற்று மாலை உதவி செய்வதுபோல் நாடகமாடி மூதாட்டியை ஸ்கூட்டரில் கடத்திச்சென்று 3 பவுன் தங்க சங்கிலி பறிப்பு மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்த நளினி வசந்தா (73) தனியாக வசிக்கும் இவர் மிக்ஸி ஜார் பழுது நீக்க கடைக்கு நடந்து சென்றபோது ஸ்கூட்டரில் அழைத்துச்செல்வதாக சேலம் நெடு ஞ்சாலையில் 2 கிலோமீட்டர் கடத்திச்சென்று தங்க சங்கிலியை பறித்துவிட்டு மூதாட்டியை சாலையோரத்தில் விட்டுச் சென்ற 2 மர்ம நபர்களை சிசிடிவி யில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments