திருச்சி தென்னூர் அண்ணா நகர் 3வது கிராசை சேர்ந்தவர் இம்ரான் (22). திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்திக்க சென்ற போது மருத்துவமனை வளாகத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றவர். திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து உறையூரை சேர்ந்த முகமது இப்ரான் (19), விக்னேஸ்வரன் (20), சரண் (20) ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி பெரிய கடைத் தெரு சந்துக்கடையை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் கடந்த 22ம் தேதி அதே பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக் திருடு போனது. இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் பாலக்கரையை சேர்ந்த அஜீத் கிளிண்டன் (25) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments