தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் திருச்சி தில்லை நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடும் போது ரூபாய் 42 லட்சம் கைப்பற்றப்பட்டது.
விசாரணையில் ரிலையன்ஸ், டி மார்ட் போன்ற வணிக நிறுவனங்களில் இருந்து தினசரி கலெக்ஷனை எடுத்துச் சென்று வங்கில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மேற்கு வட்டாட்சியர் விக்னேஷ், மற்றும் ஆர்.டி.ஓ முன்னிலையில் 42 லட்சம் ரூபாய் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments