திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருவெறும்பூர் பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கியது.
முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கு கோவிட் தடுடப்பூசி சோதனை நடைபெற்றது. அதில் 2 தவணை தடுப்பூசி போடப்பட்ட அவர்களுக்கு மட்டும் ஜல்லிக்கட்டு களத்தில் இறங்க அனுமதி வழங்கப்பட்டது.
முதலாக கோவில் காளையை கொடியசைத்து இப்போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மிக விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிகட்டில் 486 காளைகள் 300 மாடுபிடி வீரர்களுக்கு களம் கண்டனர்.அப்போது திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் அவரது காளையை வாடிவாசல் அருகே அழைத்து வரும் பொழுது திடீரென காளை பாய்ந்ததில் அவர் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மீனாட்சி சுந்தரத்திற்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பொம்மை கடை வைத்துள்ளார்.
486 காளைகள் வாடிவாசலிலிருந்து அவிழ்த்து விடப்பட்டதில் 42 பேர் காயமடைந்தனர்.10 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியின் முடிவில் புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரை சேர்ந்த யோகேஷ் 12 மாடுகளை பிடித்து முதலிடம் பெற்றார்.
அவருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
மனோஜ் என்பவர் 9 காளைகளை அடக்கி இரண்டாவது இடம் பிடித்தார்
அவருக்கு LED TV பரிசு வழங்கி கெளரவித்தார்கள்.அதே போல் களத்தில் நின்று விளையாடிய சிறந்த காளைக்கான முதல் பரிசயை உரிமையாளர்
கொட்டபட்டு தர்மராஜ் தட்டி சென்றார்.
இரண்டாம் பரிசு குண்டூர் ரமேஷ்க்கு வழங்கப்பட்டது.
வெளியூர் பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார் .180 பார்வையாளர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு காண அனுமதி எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி ஆயிரக்கணக்கானோர் இரும்பு தடுப்பு வேலிகளை தகர்தெறிந்து உள்ளே வந்து விட்டனர் .ஆயிரம் சதுர அடியில் 7 இலட்சம் ரூபாய் செலவில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .ஒரு கட்டத்தில் காவல்துறையினரின் கட்டுப்பாட்டையும் மீறி கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments