புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த மீனவேலி ஊராட்சி மன்ற தலைவருடைய மகன் வினோத். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் தன்னுடைய நண்பர் சாமிதுரை என்பவருக்கு ரூ.5.50 லட்சம் கடனாக அளித்திருந்தார். கடனை திரும்ப பெரும் பொருட்டு மணப்பாறையில் உள்ள தனியார் வங்கியில் சாமிதுரை அழைத்து கொண்டு இருச்சக்கர வாகனத்தில் சென்ற வினோத், அங்கு சாமிதுரை வங்கி கணக்கில் இருந்து ஐந்தரை லட்சம் தொகையினை பெற்றுள்ளார்.
வங்கியிலேயே கொடுத்த கடனை பணத்தை பெற்றுக் கொண்ட வினோத் பணத்தை கையில் வைத்துக்கொண்டு வங்கியின் அருகில் இருந்த தேநீரகத்தில் டீ அருந்தியுள்ளார். பின் பணத்தை முழுவதுமாக ஒரு கேரி பேக்கில் வைத்து இருசக்கர வாகனத்தின் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு அருகில் இருந்த தன் நண்பரின் நகை கடைக்கு சென்று உள்ளார்.
அங்கு பணத்தை வைப்பதற்காக புதிய ஒரு கைப்பையை பெறுவதற்காக உள்ளே சென்ற நிலையில் அவர்களுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் வினோத் நகைக்கடை உள்ளே சென்ற சில வினாடிகளில் அவரின் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ஐந்தரை லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் இருச்சருக்க வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இது குறித்து வினோத் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரினைத் தொடர்ந்து நிகழ்வு இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments