தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலில் வளாகத்தில் ரூபாய் 5.66 கோடி மதிப்பீட்டில் புதிய அர்ச்சகர் பயிற்சி பள்ளி, மாணவர் விடுதி மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றிற்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
திருச்சியில் நடைபெற்ற அடிக்கல் விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, ஸ்ரீரங்கம் கோவில் இணைய ஆணையர் மாரியப்பன், இணை ஆணையர் பிரகாஷ், ஸ்ரீரங்கம் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றியும், பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர். மேலும் துறை சார்ந்த அதிகாரிகள் கோவில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments