திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் தெற்கு இருங்களூரை சேர்ந்த லாரன்ஸ் (45) என்பவருக்கு சொந்தமான தோப்பில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தோட்டத்தில் உள்ள ஒரு அறையில் 4 ஆயிரம் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக உள்ள லாரன்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மேலும் மது பாட்டில்கள் அவர் எந்தெந்த அரசு மதுபான கடைகளில் வாங்கினால் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது பற்றிய தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments