திருச்சி மாவட்டம் துறையூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மணி இவரது மகன் வரதராஜ் (50 ). கூலித் தொழிலாளியான இவரது மனைவி, மகள் இறந்த பின் வரதராஜ் தனியாக வசித்து வருகிறார். இவருடைய மகன் தேவ பிரசாத் (27) சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் வழக்கம் போல சர்பத் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
மதியம் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீட்டின் பின்புறம் உள்ள ஓடு உடைந்தும், பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் வரதராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் திருடி சென்றது தெரியவந்தது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த துணிகர சம்பவம் துறையூரி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments