திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் சொக்கம்பட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன். இவரது 5 வயது மகன் சிவராஜ், அவர்களது விவசாய நிலத்தில் கொய்யாக்காய் பறிக்க சென்றுள்ளான். அப்போது அருகில் இருந்த தண்ணீர் தொட்டி சுவர் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளது.
இடிந்து விழுந்த சுவரின் கற்கள் சிறுவனின் தலை மற்றும் முகம் பகுதியில் விழுந்ததில் சிறுவன் படுகாயமடைந்தான். அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு வளநாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்ற நிலையில், சிறுவனை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டாதாக கூறியுள்ளனர்.
தகவலறிந்து நிகழ்விடம் சென்ற போலீஸார் சிறுவனின் உடலை உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள வளநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments