Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி மையம் – அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் செல்லும் வழியில் எலந்தபட்டி பகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் ஒலிம்பிக் அகாடமி அமைப்பதற்கான அடிகல் நட்டு விழாவிற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமை வைத்தார். நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி மையத்திற்காக அடிகளை நாட்டினார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் கங்காதரணி, திருவெறும்பூர் தாசில்தார் ஜெயபிரகாசம், திருவறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் மற்றும் அண்ணாதுரை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், விளையாட்டு பிரிவை சேர்ந்தார் மாணவ, மாணவிகள் மற்றும் எலந்தப்பட்டி கிராம பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில்…. ஒலிம்பிக்க அக்காடமி மையம் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த இடத்தில் அமைகிறது. இதற்கான அடிக்கலை ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் நாட்டியுள்ளார். இந்த நிலையில் இந்த ஒலிம்பிக் அக்காடமி ஒன்று பகுதி இரண்டு என இரண்டு பகுதியாக நடைபெறுகிறது. இந்தப் பணி 18 மாதத்தில் நிறைவடையும் இந்த பணி தொடங்கியுள்ளது. என்பதை சுற்றுவட்ட பகுதிக்கு மக்களுக்கு தெரிவிப்பதற்காக தற்பொழுது இப்பொழுது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இங்கு எல்லாவிதமான விளையாட்டுக்கும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் நேரு கூறினார். இந்த ஒலிம்பிக் அகாடமியின் சிறப்புகள் திருவெறும்பூர் அருகே உள்ள எலந்தப் பட்டி கிராமத்தில் ஒலிம்பிக் அகாடமி அமைகிறது. இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூபாய் 50 கோடி ஆகும். இது 47.87 ஏக்கர் பரப்பில் நடைபெறுகிறது. இந்த திட்டம் கால அளவு 18 மாதங்களில் நிறைவடையும் அதில் தங்கும் வசதி 2100 சதுர மீட்டர் தரைத்தளம் கட்டுமானப் பகுதியுடன் கூடிய அடி தளத்துடன் கூடிய இரண்டு மாடி அமைப்பு.

அதி நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, மாநாட்டு அறை, நூலகம் மற்றும் 100 எண்ணிக்கை கொண்ட வகுப்பு அறைகள், பணிநிலையங்கள், முதன்மை அறை, வரவேற்பு மற்றும் லாபி. முதல் தளம் – உடற்பயிற்சி அறைகள் மாற்றும் அறைகளுடன் கூடிய பிசியோதெரபி அறைகள், ஆலோசனை அறைகள் மற்றும் கழிப்பறை வசதிகள். இரண்டாவது தளம் வரவேற்பு மற்றும் லாபி, கழிப்பறை வசதிகளுடன் கூடிய தங்குமிட அறைகள். இருக்கை அரை மற்றும் ட்ரெஸ்ஸிங் அறைகள் 1000 இருக்கை மாற்றும் 2அறை, ஆடவர் மற்றும் மகளிர் கழிப்பறை.

மாநாடு மற்றும் பயிற்சியாளர் அறைகள், வைப்பறை, முதலுதவி மற்றும் லாபி 1584 சதுர மீட்டர் பரப் பளவு கொண்ட உட்புற விளையாட்டுத் தொகுதி – தரைத்தளம். கூடைப்பந்து மற்றும் பூப்பந்து மைதானம். சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கழிப்பறைகள், பயிற்சியாளர் அறை மற்றும் சேமிப்பு வசதிகளுடன் தனித்தனி அறைகள் முதல் தளம்-500 இருக்கைகள் கொண்ட கேலரி பயிற்சித் தொகுதி-2701 சதுர மீட்டர் பரப்பளவு, ஒலிம்பிக் ஸ்டாண்டர்ட் வாலிபால் கோர்ட்-3 எண்கள். ஒலிம்பிக் ஸ்டாண்டர்ட் பேட்மிண்டன் கோர்ட்-3 எண்கள் இருக்கை வசதிகள் உட்புற நீச்சல் குளம் 25 மீ x 50 மீ ஒலிம்பிக் நிலையான நீச்சல் குளம் மாற்றும் அறைகளுடன் முதல் தளம்-2302 சதுர மீட்டர் பரப்பளவு.

ஜிம்னாஸ்டிக்ஸ், பில்லியர்ட்ஸ், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, வாள் வீச்சு, மல்யுத்தம், டேக் வோண்டோ, பளு தூக்குதல், கராத்தே அலுவலகம், லாபி மற்றும் சேமிப்பு. 400 மீட்டர் 8 லேன் சிந்தடிக் டிராக், ஒலிம்பிக் ஸ்டாண்டர்ட் கால்பந்து மைதானம், இந்த திட்டத்தில் மேலும் ஒரு நுழைவு வாயில், சாலைகள், பாக்கிங் வசதிகள் மற்றும் ஒரு காம்பவுண்ட் வால் உள்ளடங்கியதாகும். பகுதி 2ல் அடுத்த கட்டமானம் இந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 100 கோடி ரூபாயாகும்.

இந்த ப்ராஜெக்டில் ஒரு ஆண்கள் ஹாஸ்டல் பகுதி, ஒரு பெண்கள் ஹாஸ்டல் பகுதி, ஒரு உணவக பகுதி, ஒரு விருந்தினர் அறை பகுதி மற்றும் ஒரு விஜபி அறை பகுதி அடங்கும். இந்த ப்ராஜெக்டில் குட்டி கர்ன நீச்சல் ஒரு உள்ளக ஷூட்டிங் கோர்ட் மற்றும் ஒரு வில்லித்தை கிரவுண்ட் ஆகியவை அடங்கும். சிந்தடிக் ஹாக்கி மைதானம், 4 கூடைப்பந்து மைதானம் 4 கையுந்துபந்து மைதானம் மற்றும் 2 கைப்பந்து மைதானம், 4 டென்னிஸ் கோர்ட், கிரிக்கெட் மைதானம், சைக்கிள் வெலட்ரோம், கேலரி மற்றும் இதர வசதிகளுடன் கூடிய கால்பந்து மைதானம் திறந்தவெளி திரையரங்கம் மற்றும் பல விளையாட்டு வசதிகள் இந்த திட்டத்தில் வீதிகள், பாதைகள் அமைப்பது மற்றும் நீர் வடிகால் பணிகள் மற்றும் வெளியக மின்சார பணிகள் அடங்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *