தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களை பாதுகாக்கும், விதமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தந்தூர் சாய் என்ற தேநீர் கடையில் சலுகை அறிமுகபடுத்தியது.
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழுக்கு பெறுமை சேர்க்கும் விதமாகவும் திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள தந்தூர் சாய் என்ற தேநீர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வருபவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் 50% தள்ளுபடி என அறிவித்திருந்தது.
இதுமட்டுமின்றி 20 திருக்குறள்களை தங்கு தடையின்றி சொல்பவர்களுக்கும் 50% தள்ளுபடி தரப்படுகிறது. மேலும் முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முகக்கவசம் கொடுக்கப்பட்டது. இதனால் தந்தூரி சாய் தேனீர் கடை அந்த பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments