திருச்சி வயலூர் சாலை அம்மையப்பன் நகரை சேர்ந்த சண்முகம் (51). இவர் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக கடந்த, 12ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊரான பொன்னமராவதி சென்றுவிட்டார். பின்னர் திருச்சிக்கு நேற்றிரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 சவரன் நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுக்குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments