உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.R.ரமேஷ்பாபு தலைமையில் இன்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின்பிரபு, பாண்டி,வசந்தன், செல்வராஜ். மகாதேவன். அன்புசெல்வன் ஆகியோர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டப பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்
ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் மொத்த விற்பனை செய்யும் சுமார் 5 மாம்பழம் குடோன்களை உணவு பாதுகாப்பு துறையின் குழுவால் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு செய்ததில் ஒரு குடோனில் 5270கிலோகிராம் எத்தீலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சட்டபூர்வ 2 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பகுப்பாய்வுக்காக சென்னை கிண்டி ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ளது. கெமிக்கல் மூலமாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் வைத்து அழிக்கப்பட்டன. மேலும் துறையூர் பகுதியில் எத்தீலின் ஸ்பிரே மூலமாக பழுக்க வைக்கப்பட்ட 15 வாழைப்பழ தார்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். R.ரமேஷ்பாபு,
கூறுகையில் இக்கோடைகாலத்தில் மாம்பழங்கள், தர்பூசணிகள் மற்றும் வாழைபழங்கள் கெமிக்கல் மூலமாக பழுக்க வைப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பொதுமக்கள் இதுபோன்ற பழங்களை இரசாயன முறையில் பழுக்க வைப்பது தெரிந்தால் உடனே உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறது. தகவல் அளிப்பவரின் விபரங்கள் இரகசியம் காக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
Comments