திருச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட 56 வாகனங்கள் நேற்று (27.09.2021) திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலம், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணி, கலால் உதவி ஆணையர் ராமன், தானியங்கி மணிமனை பொறியாளர் மோ.எஸ்தர் வத்சலா, மாவட்ட மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் முத்தரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் 47 இரு சக்கர வாகனங்கள், 6 மூன்று சக்கர வாகனங்கள், 1 நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் ரூபாய் 4,07,232 அரசு நிதியில் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற 30.09.2021-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் சம்மந்தப்பட்ட 203 இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளன.
இதில் இருசக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000/-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10000/-ம் முன்வைப்பு தொகையாக பெறப்படும். இவ்வாறு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா. மூர்த்தி அறிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments