திருச்சியில் இருந்து மலேசியா செல்வதற்காக பாடிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரிடம் இருந்து 49 லட்சத்து 11 ஆயிரத்து 030 இந்திய ரூபாய்க்கு நிகரான பல்வேறு நாடுகளின் வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், அட்டைப்பெட்டியில் சோதனை செய்யப்பட்டதில் 50 எண் நகை ஷோ கேஸ் துண்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.8,82,880/- மதிப்புள்ள 124 கிராம் எடையுள்ள 552 தங்க மூக்கு ஊசிகள் / 22 காரட் தூய்மையான சிறிய காது குச்சிகள் ஆகியவையும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கு ப பணம் மற்றும் நகைகளை கடத்த முயன்ற பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments