திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள். அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள், நிறுவனங்கள் / தொழிற்சாலைகள் தனியார் மற்றும் தனி நபர் ஆகியோரால் நிர்வகிக்கப்படும் மகளிர் தங்கும் விடுதிகள், மகளிர் மற்றும் குழந்தைகள் தங்கும் இல்லங்கள்,
பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்கான விடுதிகள் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் பெண்களுக்கான இல்லங்கள், சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்த விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் மட்டுமன்றி மதசார்புடைய வேத பாட சாலைகள், மதரஸாக்கள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தங்கி மதம் / சமயம் சார்ந்த கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும்
மாணவிகளை உடைய அமைப்புகள் / விடுதிகள் அனைத்தும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் -2014ன் படி பதிவு செய்து உரிமம் பெறவேண்டும். இவ்வுரிமம் பெறாத விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கருதப்படும். எனவே உரிமம் பெறாத விடுதிகள் http://tnswp.com என்ற இணையதளம் வழியாக உரிய ஆவணங்களுடன் (05.10.2024)க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
உரிமம் பெறாத விடுதிகள் உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்க தவறினால் விடுதியின் மீது அபராதம் மற்றும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. பலமுறை இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டும் இதுநாள் வரை உரிமம் பெறாமல் விடுதிகள் இயங்கி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதுவே இறுதி எச்சரிக்கை என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண் 0431-2413796 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார், தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments