திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 6 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் .
தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்
பட்டவர்களிடம் இருந்து ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூரில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி எஸ் பி ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் எஸ்ஐ நாகராஜ் தலைமையில் திருச்சியிலிருந்து வந்திருந்த தனிப்படை போலீசார் ஆய்வு நடத்தினர். அப்போது தொட்டியம் தாலுகா நத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணன்(55),
பாண்டமங்கலத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26),
காட்டுப்புத்தூரை சேர்ந்த ராஜேந்திரன்(40), குணசேகரன்(55), டினோபரமேஸ் (32), குமார்(47) ஆகியோர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்தது.
Advertisement
இதையடுத்து போலீசார் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் ,செல்போன் மற்றும் உபகரண பொருட்கள் ரொக்கப் பணம் ரூ,6,750 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதில் தப்பி ஓடிய காட்டுப்புத்தூரை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments