கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கிடையில் தமிழ் மாதங்களில் சிறப்பு பெற்ற ஆடி மாதத்தில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவு காணப்படும்.
இதனால் கோவில் கோவிட் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் திருச்சி சமயபுரம் கோவிலில் பக்தர்கள் வந்து கோவிலின் நுழைவாயிலில் சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர். சிலர் நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.
மேலும் அரசு உத்தரவை மீறி சமயபுரம் கோயில் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் பகுதியில் பக்தர்களுக்கு மொட்டை அடித்த மருதூரைச் சேர்ந்த கண்ணன், அதே பகுதியைச் சேர்ந்த ராஜ், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள சூரியனூர் கீழத்தெருச் சேர்ந்த சுப்பிரமணி, சமயபுரத்தைச் சேர்ந்த ராஜ், ஜீவகன், வீ. துறையூரைச் சேர்ந்த குமார் ஆகிய 6 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments