திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு காவல் துறைக்கு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மதுவிலக்கு பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், அரசு மதுபான பாட்டில்கள் கள்ளச் சந்தையில் விற்ற ஆறு பேரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்து 175 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தமிழக அரசு தமிழகம் முழுவதும் தீவிரமாக கள்ளச்சாராயம் விற்பவர்கள் போலி மதுபானம் விற்பவர்கள் மற்றும் அரசு மதுபானங்களை கள்ளச் சந்தையில் விற்பவர்களை பிடித்து நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக அதிரடி வேட்டை நடத்தி சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்கு உட்பட்டபகுதியில் மதுவிளக்கு பிரிவு போலீசார் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டதோடு பல ஆண்டுகளுக்கு முன்பு கள்ளச்சாராயம் காய்ச்சியவர் பற்றியும்அவர்கள் தற்பொழுது செய்து வரும் தொழில்கள் பற்றியும் தகவல்கள் சேகரிப்பதோடு,
அந்த பகுதியில் யாரேனும் புதிதாக கலாச்சாராயம் காய்ச்சுகிறார்களா? அல்லது கள்ள சந்தையில் மதுபானம் விற்கிறார்களா போலி மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்தும் அதிரடியாக ஆய்வு செய்தனர்.
மேலும் கன்னியங்குடி, வாளாடி, வலையூர், தாளக்குடி, ராம்ஜி நகர், பூங்குடி ஆகிய பகுதிகளில் கள்ள சந்தையில் அரசு மதுபான பாட்டில்களை விற்ற 6 பேரை மதுவிலக்கு பிரிவு ஜெயச்சித்ரா தலைமையிலான போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 175 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து அதிரடியாகபல்வேறு பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி பகுதியில் போலி மது கள்ளச்சாராயம் விற்பது குறித்து தகவல்கள் ஏதேனும் இருந்தால் 9445463494 / 91 94981 11155 இந்த இரண்டு செல்போன் எண்களிலும் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments