திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெரியண்ணா நகரை சேர்ந்தவர் பசுபதி ஈஸ்வரன். திருச்சியில் உள்ள ஒரு வழக்கறிஞரிடம் குமாஸ்தா வேலை பார்த்து வருகிறார். நேற்று வழக்கு போல் திருச்சியில் உள்ள அலுவலகத்திற்கு பசுபதி ஈஸ்வரன் சென்று விட்டார். இதனால் அவரது வீட்டில் மனைவி பிரியதர்ஷினி மற்றும் பசுபதி சூரியன் வயதான தாயாரும் மட்டுமே இருந்தனர்.
இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பிரியதர்ஷியிடம் தான் ஜோதிடர் என்றும் உங்கள் வீட்டுக்காரருக்கு தாலி தோஷம் இருக்கிறது தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்றால் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தாலியை வைத்து பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் மயக்க பொடி கலந்த விபதியை பூசிக்கொள்ளுமாறு கொடுத்துள்ளார். பின்னர் பிரியதர்ஷினி விபதியை வாங்கி பூசி உள்ளார்.
இதில் மயக்க நிலைக்குச் சென்ற பிரியதர்ஷினியின் கழுத்தில் இருந்த ஆறு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். மயக்கம் தெளிந்து தன் நிலைக்கு வந்த பிரியதர்ஷினி தனது கழுத்தை பார்த்தபோது அந்த ஆசாமி சங்கிலிப் பறித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நூதன முறையில் தங்க சங்கிலியை பறித்து சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments