தமிழ்நாடு தகவல் ஆணையர் முனைவர் மா.செல்வராஜ், மேல்முறையீட்டாளர்களின் நலனை கருதி (24.10.2024) மற்றும் (25.10.2024) ஆகிய இரண்டு நாட்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்ட அரங்கில் காலை 10:00 மணி முதல் மனுதாரர்களையும் மற்றும் பொது தகவல் அலுவலர்களையும் விசாரணை செய்தார்.
இதில் (24.10.2024) அன்று 30 வழக்குகளும், (25.10.2024) அன்று 30 வழக்குகள் ஆக இரண்டு நாட்கள் முடிவில் 60 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. (24.10.2024) அன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் துறையின் 13 வழக்குகளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் 17 வழக்குகளுக்கும்,
மேலும் (25.10.2024) அன்று திருச்சி வக்பு வாரியத்தின் 4 வழக்குகளும், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் 24 வழக்குகளுக்கும் மற்றும் திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலைத்துறையின் 2 வழக்குகளும் இரண்டு நாட்களில் தீர்வு காணப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments