திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் வீடு மற்றும் கடைகளில் ஹான்ஸ் கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் திருச்சி வேங்கூர் நடராஜபுரம் சாலை அசோக் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (53), திருவெறும்பூர் மேல குமரேசபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஸ்டீபன் (50), துவாக்குடி வடக்கு மலை அண்ணா வளைவு பெரியார் மணியம்மை நகரை சேர்ந்த காமராஜ் (29) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 60 கிலோ ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட குட்கா பொருட்களையும், ரூ.49 ஆயிரத்து 100 ரொக்கம், மூன்று செல்போன், ஒரு கார், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து திருச்சி குற்றவியல் எண் 6வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments