தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கான 62வது விளையாட்டு போட்டிகள், திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் மத்திய, மண்டல காவல்துறை தலைவர் G. கார்த்திகேயன், தலைமையில்,
திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் கண்காணிப்பாளர் A. சரவண சுந்தர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் சுஜித் குமார், மேற்ப்பர்வையில் கடந்த இரண்டு நாட்களாக (14.07.2023 மற்றும் 15.07.2023) நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு முழுவது உள்ள அமைச்சு பணியாளர்களின் சரக அளவிலான அணிகள் பங்கேற்றனர். அதில் 1400 போட்டியாளர்கள் (அமைச்சு பணியாளர்கள்) கலந்துகொண்டனர்.
28 வகையான விளையாட்டு போட்டிகள் (இறகுப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் இதர) நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய மண்டல காவல் துறை தலைவர் வாழ்த்து கூறி பரிசளித்து பாராட்டினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments