திருச்சியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசிகளை கடத்தி அவற்றை வெளி சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தவர்களை பிடித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனி அருகே உள்ள விவேகானந்தர் நகரில் மாவு அரவை மில்லில் பதுக்கி வைத்திருந்த 17 மூட்டைகளில் 680 கிலோ ரேசன் அரிசியை உணவு வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் அதிகாரிகள் சோதனை நடத்துவதை தெரிந்து கொண்டதை அடுத்து இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி மூட்டையுடன் விட்டு விட்டு ஓடி சென்றுள்ளனர். கடத்தல்கார்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments