மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானங்கள் வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் தங்கம், சிகரெட், வெளிநாட்டு கரன்சி ஆகியவை கடத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.
இதற்கிடையில் திருச்சி விமான நிலையத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக காவல்துறைக்கு வந்த தகவலின்படி திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு அதிரடி படை போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து பணம், நகை மற்றும் செல்போன் போன்றவற்றை சட்ட விரோதமாக கைமாற்றும் கும்பலைச் சேர்ந்த 7 பேரை சிறப்பு படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணம், நகை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments