திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சோழமாநகர் குலோத்துங்கன் சாலையை சேர்ந்தவர் சூரியகுமார் (71). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணம் ஆகிய நிலையில் முதல் மகள் ஸ்ரீரங்கத்திலும், இரண்டாவது மகள் சென்னையிலும் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி சென்னையில் உள்ள இரண்டாவது மகள் வீட்டிற்கு சூரியகுமார் அவரது மனைவியும் சென்றுள்ளனர். இன்று (21.07.2021) காலை 5 மணி அளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக சூரியகுமார் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நவல்பட்டு போலீசார் சூரியகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் பீரோ அருகே மேஜையில் இருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து பீரோவில் வைத்திருந்த அரை பவுன் மோதிரம் 4, முக்கால் பவுன் தோடு 1, அரை பவுன்தோடு 2, மற்றும் 3 பவுன் அட்டிகை உட்பட மொத்தம் 7 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
Comments