திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரப்பூர் வீரமலை வனப்பகுதியில் பல்வேறு பிரிவு இந்திய துணை ராணுவப் படையினர் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர் சுடும் பயிற்சி நடைபெறும். கடந்த ஜனவரி 27-ஆம் தேதி கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள ராணுவத்தின் பீரங்கி படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ராக்கெட் லாஞ்சர் சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வனப்பகுதிக்குள் வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் 2 ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கிடைக்காத நிலையில் இது குறித்து வையம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மணப்பாறை பகுதிக்கு உட்பட்ட கருங்கல்பட்டியில் ஒரு ராக்கெட் லாஞ்சர் குண்டும், மத்தகோடாங்கிபட்டி என்ற இடத்தில் ஒரு ராக்கெட் லாஞ்சர் கொண்டும் கிடப்பதாக போலீசாருக்கு வருவாய் நெருக்கும் வனத்துறையினர் தகவல் அளித்தனர்.
இதுகுறித்து கோவை துணை ராணுவ பீரங்கி படை பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது நேற்று சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு பிரிவை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜமாணிக்கம் அருளானந்தம் உள்ளிட்ட 4 போலீசார் சோதனை செய்தனர்.
அதே பகுதியில் மேலும் ஐந்து குண்டுகள் கிடந்தது தெரியவந்தது பின்னர் அவற்றை வனப்பகுதிக்குள் 10 அடி ஆழக் குழிக்குள் வெவ்வேறு இடங்களில் புதைத்து செயலிழக்க செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments