Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

அரியமங்கலம் குப்பை கிடங்கில் 70 சதவீதம் உயிர் சுரங்கப் பணிகள் முடிவு பெற்றுள்ளது

திருச்சி அரியமங்கலத்தில் உள்ள 47.5 ஏக்கர் குப்பை கிடங்கில் திருச்சி மாநகராட்சி மேற்கொண்ட உயிரி சுரங்க திட்டம் 5.50 லட்சம் கனமீட்டர் நகராட்சி திடக்கழிவுகளை மீட்டு மறுசுழற்சி செய்து முடிந்துள்ளது. 2.1 லட்சம் கனமீட்டர் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வேண்டிய நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் அறிவியல் மறுசுழற்சி மூலம் நில மீட்பு திட்டத்தை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 49 கோடி ரூபாய் செலவில் திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி மிஷன் பிப்ரவரி 2020 அரியமங்கலம் குப்பை கிடங்கில் உயிர் சுரங்கப் பணிகளை ஆரம்பித்தது. 

1967 முதல் திருச்சி மாநகராட்சி திடக் கழிவுகளை கொட்டுவதற்கு  பயன்படுத்தப்பட்ட குப்பை கிடங்கு 7.60 லட்சம் கனமீட்டர் கழிவுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. கொரோனா காலத்தின் முதல் அலையில்   பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது அணியில் எவ்வித பாதிப்புமின்றி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. ஈரோட்டில் உள்ள ஜிக்மா குளோபல்  என்விரோன்ஸ் நிறுவனம் சுமார் 120 தொழிலாளர்கள் மற்றும் பிரத்தியேக இயந்திரங்களுடன் நிறுவப்பட்ட உயிர் சுரங்கத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் 1500 மெட்ரிக் டன் கழிவுகளை மறுசுழற்சி செய்து வந்தது.

சுரங்க ஆலை 5.50 லட்சம் கனமீட்டர் கழிவுகளை மறுசுழற்சி செய்து உள்ளது. மழையின் போது கழிவுகளை பதப்படுத்துவது கடினம். எனவே சிறிது தாமதம் ஏற்பட்டது உயர் சுரங்களை சுற்றி உள்ள கழிவு மேடுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன என்று திட்டத்தின்  சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. துண்டாக்கப்பட்ட பிளாஸ்டிக், துணி மற்றும் செயற்கை தோல் கழிவுகள் உலைகளில் எரிபொருளாகப் பயன்படுத்த சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பபட்டாலும்  உலோகம், டயர்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் மறுசுழற்சி செய்வதற்கு தென்னிந்தியா முழுவதும் அந்த தொழிலகங்களுக்கு அனுப்பப்பட்டன.   

கழிவு மேடுகளில் இருந்து மீட்கப்பட்ட மனித உடல் மற்றும் கட்டுமான குப்பைகள் நிலப்பகுதிக்கு பயன்படுத்தப்பட்டன முழுவதையும் மீட்டெடுக்க தேவையான கூடுதல் நடவடிக்கை அறிய திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின்  நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழு  ஆய்வின் நடத்த குடிமை அமைப்பு திட்டமிட்டுள்ளது. டிசம்பர் 2021ல் நிலத்தில் குறைந்தது 25 ஏக்கர் நிலத்தை மீட்க பங்குதாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

நுண்ணுயிரிகளின் பயன்பாட்டை உள்ளடக்க உறுதிப்படுத்துதல் செயல்முறை கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய தீ விபத்துக்களை தவிர்க்க உதவியது. குப்பைக்கிடங்கில் மேற்பகுதி கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *