உணவு பாதுகாப்பு துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திண்படங்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாத நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் திடீர் ஆய்வு திருச்சி உறையூர் பகுதியில் புதன்கிழமை மேற்க்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது லேபிளிங் விதிகளை பின்பற்றாமல் காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடாமல் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 74 கிலோ எடை கொண்ட மிக்சர் மற்றும் கார வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்கொள்ளும் திண்படங்களில் தயாரிக்கும் தேதி, காலாவதி தேதி மற்றும் முழுமையான முகவரி தொடர்ந்து அச்சிடப்படாமல் இருந்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி தற்காலிகமாக அந்த உணவு வணிகத்தின் தயாரிப்பு நிறுத்தப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

இதுபோன்று பொதுமக்கள் தங்கள் பகுதியில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவு பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதை தெரிவிக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தாங்கள் அளிக்கும் புகார் இரகசியம் காக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
13 Jun, 2025
389
14 April, 2023










Comments