கடந்த 2017 ஆம் ஆண்டு வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களை எல்ஐசி ஊழியர்கள் என தொலைபேசி மூலம் அறிமுகம் செய்துகொண்டு திருச்சி லால்குடி பகுதியை சேர்ந்த அம்துல்கனி பாட்சா (எ) APL பர்வீன் கனி என்பவரிடம் எல்ஐசி பாலிசி முடிவடைந்து விட்டதாகவும், அதனை மத்திய அரசின் சில திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசி அதற்கான பல்வேறு தவணைகளாக 86,36,963 வரை ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்ய சொல்லி பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.
இது சம்பந்தமான வழக்கு திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுபடி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் சிபிசிஐடி காவல் துறை இயக்குனர், சிபிசிஐடி காவல்துறை தலைவர். சிபிசிஐடி காவல்துறை துணைத்தலைவர் மற்றும் சிபிசிஐடி மத்திய மண்டல காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் நிர்மலா அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் லட்சுமி, சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன், ஆனந்த்பாபு ஆகியோர் டெல்லி சென்று முகாமிட்டனர்.
இவ்வழக்கில் எதிரிகளில் ஒருவனான அபினேஷ் குமார் சிங் (எ) அமன் (26) என்பவரை கடந்த 29.07.2021 ஆம் தேதி கைது செய்து உரிய சட்ட முறைகளைப் பின்பற்றி 01.08.2021ம் தேதி திருச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4 பொறுப்பு குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 6 முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை டெலிகிராம் வழி அறிய:
https://t.me/trichyvisionn
Comments