திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த அப்பாதுரை ஊராட்சிக்கு உட்பட்ட அகிலாண்டபுரம் பிஎஸ் நகரில் வசிப்பவர் இமானுவேல். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் . இந்நிலையில் இவரது வீட்டில் இன்று ஒன்பது அடி உயர நல்ல பாம்பு ஒன்று வீட்டின் சுற்றுச் சுவர் பகுதியில் உள்ள ஒரு துளையில் புகுந்து கொண்டது.
இதனை பார்த்த இமானுவேல் நல்ல பாம்பை விரட்டுவதற்கு பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார். ஆனால் நல்ல பாம்பு அப்பகுதியை விட்டு செல்லவில்லை. தொடர்ந்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்த ஸ்ரீரங்கம் தீயணைப்பு துறையினர் மாவட்ட அலுவலர் பொறுப்பு கணேசன் உத்தரவின் பெயரில்
பெரியண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தாமஸ், மணிகண்டன், தீனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments